23 Jan 2009

அழகு - பாடல்

அழகே அழகே

உன்னில் எல்லாம் அழகு

கர்வம் இல்லை அதுவே உன்னில் அழகு

களங்கம் இல்லை அதுவும் உன்னில் அழகு

உன்னில் கோபம் இல்லை அதுவும் உன்னில் அழகு

அன்பும் உண்டு அதில் பேதம் இல்லை அதுவே உன்னில் அழகு

என்னோடு பேசிப்பழகு........................

சரணம்:

நீ சிரிக்கும்போது தலை தூக்கும் வெட்கம் உன்னில் அழகு

நீ பேசும்போது கொஞ்சும் குழந்தை பேச்சும் அழகு

வார்த்தை பலபேசும் உன் பார்வை கூட அழகு

கோபமாய் மூச்சுவிடும் உன் சுவாசகாற்றும் அழகு

உன்னில் எல்லாம் அழகு, என்னோடு பேசிப்பழகு........

சரணம்:

நீ நடக்கும் போது கூடவரும் உன் நிழலும் கூட அழகு

நீ அனுதினம் பார்த்து ரசிப்பதால் நிலவும் கூட அழகு

உன் காதலுக்காக நான் ஏங்கும் ஒவ்வொரு நொடியும் அழகு

என் கவிதைகளில் நிறையும் உன் நினைவுகள்தானே அழகு

உனைப்பற்றி எழுதும் தமிழும் கூட அழகு

உன்னில் எல்லாம் அழகு, என்னோடு பேசிப்பழகு.............

No comments:

Post a Comment