30 Jan 2009
28 Jan 2009
ரோஜா
கூந்தல்
ஏ பூவே,
நீ செடியில் இருக்கும் அழகைவிட,
அவள் கூந்தலில் அழகாய் பூத்திருக்கிறாய்..............................
அவள் சூடியதால் நீ அழகாய் இருக்கிறாயா?
உன்னை சூடியதால் அவள் அழகாய் இருக்கிறாளா????????
பூ
கவி தொடுக்க பாக்கள் தேடினேன்
கிடைக்கவில்லை.....
பூக்கள் வைத்து எழுதினேன்
அதுவும் உன்னையே பிரதிபலித்தது
நிலா
காதலன் பொய்யில் நாயகி நீ
வான் தேவதையின் திலகம் நீ
சோருண்ணும் மழலையின் பொம்மை நீ
இம்மண்ணில் வாழா மங்கை நீ
இரவில் ஒளிரும் ஆபரணம் நீ
வளர்ந்தே தேயும் முழு வடிவமும் நீ
இக்கவி தலைப்பு நிலவே நீ
கவிஞன் பொய்கள்
போதெல்லாம் என்னையே மறக்கிறேன்......................
என்னை மறக்கும் போதெல்லாம்
உன்னையே நினைக்கிறேன்....................
கவிஎழுத தொடங்கி
உன் பெயரெழுதி முடிக்கிறேன்.....
நினைவுகள் நெஞ்சினை சுடுகின்றன
கனவுகள் கூட கனவாய் கண்ணை தழுவுகின்றன
இப்போது நான்,,,
வார்த்தை இல்லா கவி போல.........
இதயம்
25 Jan 2009
24 Jan 2009
எந்த கதவும் திறக்கும்

எழுந்து வா
இதோடு முடிந்துவிடவில்லை உன் வாழ்க்கை
இருக்கிறது இன்னும் சாதிக்க
விரைந்துவா மற்றவருக்கும் போதிக்க
தோல்வி காண்பதே வாழ்க்கைஅல்ல
அதையும் வெற்றியாக்குவதுதான் வாழ்க்கை
இளமை என்பது இலைசருகுபோல போனால் திரும்பவராது
சாதிக்க புறப்படு!
தோல்வியை தோல்வி அடைய செய்
நிலவுகூட வளர்ந்து தேய்ந்து விடுமுறை எடுக்கிறது - அமாவாசையன்று
ஆனால் நீயோ,
உழையாமல் வெற்றிகாண நினைக்கிறாய்;
விட்டுவிடு! இதுவரை நீ செய்த தவறை
துவக்கிடு! உன் வாழ்க்கை பணியை
உன் உடலை நனைப்பது வெறும் கண்ணீர்துளிகளாய் இருக்ககூடாது
வியர்வை துளிகளாய்தான் இருக்க வேண்டும்
உழைத்து வாழ்;
பிறர் உன்னை மதிக்க வாழ் ;
அப்போது தானாகவே திறக்கும் - உன் வெற்றிக்கதவு
நீ தாழ் திறவாமலே.......
23 Jan 2009
அழகு - பாடல்
அழகே அழகே
உன்னில் எல்லாம் அழகு
கர்வம் இல்லை அதுவே உன்னில் அழகு
களங்கம் இல்லை அதுவும் உன்னில் அழகு
உன்னில் கோபம் இல்லை அதுவும் உன்னில் அழகு
அன்பும் உண்டு அதில் பேதம் இல்லை அதுவே உன்னில் அழகு
என்னோடு பேசிப்பழகு........................
சரணம்:
நீ சிரிக்கும்போது தலை தூக்கும் வெட்கம் உன்னில் அழகு
நீ பேசும்போது கொஞ்சும் குழந்தை பேச்சும் அழகு
வார்த்தை பலபேசும் உன் பார்வை கூட அழகு
கோபமாய் மூச்சுவிடும் உன் சுவாசகாற்றும் அழகு
உன்னில் எல்லாம் அழகு, என்னோடு பேசிப்பழகு........
சரணம்:
நீ நடக்கும் போது கூடவரும் உன் நிழலும் கூட அழகு
நீ அனுதினம் பார்த்து ரசிப்பதால் நிலவும் கூட அழகு
உன் காதலுக்காக நான் ஏங்கும் ஒவ்வொரு நொடியும் அழகு
என் கவிதைகளில் நிறையும் உன் நினைவுகள்தானே அழகு
உனைப்பற்றி எழுதும் தமிழும் கூட அழகு
உன்னில் எல்லாம் அழகு, என்னோடு பேசிப்பழகு.............
வானவில்
ஒரு ரோஜாவின் குமுறல்

ஹே பெண்ணே உன் கூந்தல் சேர
நான் இன்னொரு பிறவி எடுப்பேன்
உன் கூந்தலில் சேரதுடிக்கும்



