
18 Aug 2010
17 Aug 2010
16 Aug 2010
14 Aug 2010
கல்வி பற்றி என் கருத்து
கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று. கல்வி மனிதனை மனிதனாகவே இருக்க வைக்கிறது.. உலகிலேயே சிறந்தது கண்தானம், ரத்ததானம், அன்னதானம் என்று பல கருத்துக்கள் உண்டு.. ஆனால் உண்மை என்னவென்றால், கல்வி தானம் இந்த மூன்றையும் விட சிறந்தது.. ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு, பாடசாலைக்கு சென்றால் மட்டுமே கிடைப்பதில்லை... நாம் கல்வியை அன்றாடம் பழகும் மனிதர்களிடமிருந்தும், நாம் பேசும், உரையாடும், தவறு செய்யும் சில விஷயங்களிலும் இருந்தும் கற்றுகொள்கிறோம்... நாம் சந்திக்கும் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு செயலும், ஏதோ ஒன்றை நமக்கு சொல்லித்தருகிறது... அதை சிலர் புரிந்து கொள்ளாமலே கற்கின்றனர்..... ஒரு திறமைமிக்க வல்லரசு நாடு என்பது, நல்ல சமுதாயத்தை கொண்டே அமைகிறது... அது மாணவர் சமுதாயம்... தொழில் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும், வியாபார சக்தியிலும், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கும் பல நாடுகள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத்தான் இருக்கும்... அந்நாடுகள் கல்வியை ஊக்குவிக்கின்றதோ இல்லையோ, நல்ல கல்வி பயின்ற திறமையுடைய மனிதர்களை வைத்து, நாட்டின் வளர்ச்சியை பெருக்கிகொள்கிறது..... ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அவசியம்... இன்றும் பல கிராமங்களில், பள்ளிகூடங்கள் இல்லாத நிலை நீடித்துகொண்டிருக்கிறது.... அதுமட்டுமல்லாது, பல குழந்தைகள், மாணவர்கள் பல தூரம் பிரயாணித்தும், நடந்து சென்றும் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது... நம் பிரதமர் ஏற்படுத்திய திட்டம், ஊருக்கு ஒரு பள்ளி, ஐந்து கிலோமீட்டர்க்குள் ஒரு பாடசாலை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது... இருந்தும், இன்றும் பல கல்லூரிகளில் சில ஆசிரியர்களும் சரிவர வருவதில்லை, ஒரு தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதில்லை..... நகரங்களில், சில பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் சரிவர செல்வதில்லை... தயவு செய்து மாணவர்களே படியுங்கள் உங்களுக்காகவும் நாட்டிற்காகவும்..... கிரிக்கெட்டில் மட்டும் தலை நிமிர்ந்து நின்றால் போதாது, நாட்டின் வளர்ச்சியிலும் நாம் உயர்ந்து நிற்க வேண்டும்..... உங்கள் கல்வி இந்திய ராணுவ படையை விட சக்திவாய்ந்ததாகும்... உங்களின் இன்றைய உழைப்பு (கல்வி) நாளைய இந்திய வரலாறு..... 13 Aug 2010
12 Aug 2010
9 Aug 2010
உங்களுக்காக நான்
7 Aug 2010
5 Aug 2010
நண்பனே உனக்காக...
நம்மை பிரித்தாலும்பிரிவு
உறவு நம்மை இணைக்கிறது
ஆம், நட்பெனும் உறவு
இரு உள்ளங்களை இணைக்கும்
காதலிலும் தோல்வியுண்டு
நட்பில் அது இல்லை ...
நண்பனே,நட்பே,அண்டங்களில் மிதக்கும்
பூமியெனும் உருண்டையில்
ஒப்பற்ற ஒரே உறவாம் நட்பு,
உன் பிரிவிற்காக உள்ளம் ஏங்குகிறது...
உன்னை பற்றி எழுத வார்த்தைகளை தேடினேன்
கிடைக்கவில்லை!!!
நட்பெனும் வார்த்தைக்கு பொருளறிந்தேன்...
உன்னிடத்தில் எதையும் எதிர்பாராதது!!! என
இவ்வுலகினில்,இலைச்சருகுகள் என்னவோ
காய்தலை அறியாது,
நானும் உன் பிரிவை,
இதுவரை அறியவில்லை...
காதலனாய் இருந்துப்பார்,
முடியாது மனதின கட்டுபடுத்த...
தூய நண்பனாய் இருந்துப்பார்,
முடியாது அவனிடம் பொய் சொல்ல...
காதலின்றி வாழ்த்திட இயலும்
நட்பின்றி வாழ்வது கடினம்,
நம் வாழ்வில் கடைசிவரை நீடிக்கும்
ஒரே உறவு - நட்பு
எங்கெங்கோ பிறந்தோம்
எங்கெங்கோ படித்தோம்
கல்லூரியில் இணைந்தோம்
நட்போடு மகிழ்ந்தோம்
குடும்பமாய் வாழ்ந்தோம்
சிறு கண்ணீரோடு பிரிவோம்....
உண்மை கவிதை எழுதினால் தெரியும்,
உண்மை காதல் மனதினை அறியும்,
உன்னை உறவுகள் வறுமையில் தெரியும்,
உன்னை நட்பு துன்பதினில் புரியும்...
காதலுக்கு எல்லை உண்டு
நம் பார்வைக்குள் அடங்காத
வானுக்கும் எல்லை உண்டு
நட்புக்கு அது இல்லை
நட்பு உறவுகளை விட மேலானது
வறுமையிலும் மாறாதது...
என்றும் அன்புடன்,
உங்கள் நண்பன்














